கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட பாணியில் ரோல்ஸ் ராய்ஸ் கார் திருட்டு!

விலையுயர்ந்த காரான ரோல்ஸ் ராய்ஸ் நவீன முறையில் 30 நொடிகளில் திருடப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகின் விலை உயர்ந்த கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் எப்போதும் கச்சிதமாக, நவீனமாக அமைக்கப்பட்டிருக்கும். கார்களின் விலை அதிகமாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். இந்த நவீன கார்களைத் திருடுவது என்பது மிகப்பெரிய சவால். ஆனால் அப்படி ஒரு பிரபல விலையுயர்ந்த காரைக் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட பாணியில் 30 வினாடிகளில் எளிதாகத் திருடிச் சென்ற சம்பவம் லண்டனில் நடைபெற்றுள்ளது. 

பிரபல கார் நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸின் கார்தான் 30 வினாடிகளில் திருடப்பட்டுள்ளது. லண்டனின் புறநகர் பகுதியில் ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த காரை வெறும் இரண்டு பேர் மட்டும் சேர்ந்து நவீன முறையில் திருடியிருக்கின்றனர்.

அதிகாலை 4 மணியளவில் வந்த 2 திருடர்களில் ஒருவர் காருக்குள் இருக்க, மற்றொருவர் கையில் ஒரு ஆன்டனாவை உயரத் தூக்கிக் காட்டியபடி வெளியே நிற்கிறார். சில நொடிகளில் கார் ஸ்டார்ட் ஆகிவிட இரண்டு திருடர்களும் அந்தக் காரில் பறந்து சென்றுவிடும் காட்சி சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. 

இப்போது, விலையுயர்ந்த கார்களில் உள்ள ஒரு பாதுகாப்பு சிறப்பம்சம்தான் இந்தத் திருட்டில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை  'ரிலையிங்' என அழைக்கிறார்கள். காரின் உரிமையாளர் சாவியுடன் காரிடம் நெருங்குகையில், சாவியிலிருந்து வரும் சிக்னலைக் கார் பெருகிறது. பின் தானாகவே திறந்துவிடுகிறது.

அந்த அம்சத்தினடிப்படையிலேயே இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது. காரின் சாவி வீட்டிற்குள் தூரமாக இருந்தாலும் திருடர்களின் ஆன்டனா அந்த சாவியில் இருந்து  வரும் சிக்னலைப் பெற்று காருக்கு அனுப்பியுள்ளது. இதனால் கார் தானாக திறந்து, ஸ்டார்ட் ஆகிவிட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சமீபகாலமாக அதிகமான கார்கள் திருடுபோவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திருடப்படும் கார்கள் மத்திய கிழக்குப் பகுதிகளுக்குக் கடத்தப்படுவதாகவும், திருடப்பட்ட  காரைக் கண்டுபிடிக்க முயற்சி நடந்துவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com