அத்தியாவசிய மருந்துகளுக்காகப் போராடும் பின்தங்கிய நாடுகள்!

காசநோய், எச்.ஐ.வி தோற்றுக்கான மருந்துகளைப் பெற வளர்ந்த நாடுகளை விட பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் அதிகம் செலவிட வேண்டியதாக உள்ளது.
ஆப்ரிஜென் நிறுவனத்தின் ஆய்வுக் கூட,
ஆப்ரிஜென் நிறுவனத்தின் ஆய்வுக் கூட,

காச நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஆகிய உயிரைப் பறிக்கும் நோய்களைக் குணப்படுத்தும் அத்தியாவசிய மருந்துகளுக்காக, மருந்து தயாரிக்கும் பெருநிறுவனங்களிடம் தென்னாபிரிக்கா, கொலம்பியா போன்ற நாடுகள் போராடி வருகின்றன.

கோவிட் பெருந்தொற்று சூழல் உருவான போது அதற்கான தடுப்பூசி மருந்துகளை உலக நாடுகள் பெருமளவில் கைப்பற்றிய பிறகுதான் பின்தங்கிய நாடுகளுக்கு அவை அளிக்கப்பட்டன. 

இந்தச் சமத்துவமின்மையைக் கண்டித்த உலக சுகாதார நிறுவனம் இதனை அறத்தின் தோல்வியால் உண்டான பேரழிவு எனக் குறிப்பிட்டது.

இந்த நிலையில், தென்னாபிரிக்கா எதிர்கொள்ளும் பெரிய பிரச்னை காசநோய். 2021-ல் மட்டும் காசநோயால் அந்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இறந்துள்ளனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

காசநோய்க்கான மருந்துகளில் ஒன்றான பெடாகுலினுக்கான காப்புரிமை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடம் உள்ளது. இதற்கான காப்புரிமை கடந்த மார்ச்சில் நிறைவுற்ற நிலையில் அதனை 2027 வரை நீடித்துள்ளது அந்நிறுவனம்.

காசநோய்க்கான பரிசோதனையின்போது
காசநோய்க்கான பரிசோதனையின்போது

தென்னாபிரிக்க நாட்டின் சமூகநல ஆர்வலர்களின் போராட்டத்தால் அரசு அந்நிறுவனத்தின் விலை கொள்கையின் மீது விசாரணை மேற்கொண்டது.

ஒருவருக்கான சிகிச்சைக்கு 282 அமெரிக்க டாலர் வரை அரசு செலவிட வேண்டியிருந்தது. காசநோய்க்கான உலகளாவிய முயற்சியின் விளைவாக அரசு இந்த மருந்துகளைப் பெறுகிற போதும், இந்தத் தொகை இரு மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த விசாரணை தொடங்கிய அடுத்த வாரத்திலேயே ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் 130 நாடுகளில் குறிப்பிட்ட அந்த மருந்துக்கான தனது காப்புரிமையைக் கைவிடுவதாக அறிவித்தது.

இதேபோல, கொலம்பியா எச்.ஐ.விக்கான மருந்தான  டோலுடெக்ராவிர் மருந்தின் காப்புரிமையை வைத்திருக்கும் வீவ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் அனுமதி பெறாமல் மருந்தை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

ஆப்ப்ரிக்க தனியார் நிறுவனத்தில் நடைபெறும் மருந்து ஆய்வு 
ஆப்ப்ரிக்க தனியார் நிறுவனத்தில் நடைபெறும் மருந்து ஆய்வு 

பின்தங்கிய நாடுகள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகளை இந்தக் காப்புரிமை பிரச்னையால் சுயமாக உற்பத்தி செய்ய இயலாத நிலை உள்ளது. 

கொரானா பேரிடரின்போது தென்னாபிரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசி 1 சதவீதம் மட்டுமே. ஆனால் உலகளவில் மொத்த அளிப்பின் பாதியை இறக்குமதி செய்து பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் காசநோய்க்கான மருந்து மீதான காப்புரிமை பிரச்னை எழுந்த போது இந்திய அரசு அதற்கான காப்புரிமையை உடைக்க அனுமதி அளித்தது.

பெருநிறுவனங்கள் மக்களின் வாழ்வைக் காக்கும் மருந்துகளின் காப்புரிமையை வைத்திருப்பது என்பது ஏற்க இயலாதது. தேவைப்படுபவர்களுக்கு மருந்து கிடைக்கவில்லையெனில் அவற்றால் எந்தப் பயனுமில்லை என்கிறார்கள் ஆப்பிரிக்க மருந்து தயாரிப்பாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com