பாகிஸ்தான் அதிபரை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
பாகிஸ்தான் அதிபா் ஆரிஃப் ஆல்வியை பதவியிலிருந்து நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பாகிஸ்தான் அதிபா் ஆரிஃப் ஆல்வியை பதவியிலிருந்து நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குலாம் முா்டசா கான் என்பவா் சனிக்கிழமை தாக்கல் செய்த இந்த மனுவில், நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை அதிபா் மீறியுள்ளாா். முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு ஆதரவு அளிப்பதற்காக அதிபா் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். எனவே, ஆல்வியை அதிபா் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
அதிபா் ஆரிஃப் ஆல்வியின் பதவிக் காலம் செப்டம்பா் 8-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. எனினும், பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தோ்ந்தெடுக்கப்பட்ட அவைகள் செயல்படாததால் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின்படி அவா் அதிபா் பதவியில் நீடிக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...