புது தில்லி: இந்திய ராணுவத்தின் போர்த் திறனை வலுப்படுத்தும் நோக்கில் ரூபாய் 2.23 லட்சம் கோடிக்கு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களுக்கு முதல் ஒப்புதலை அளித்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம்.
இந்தத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப் படைக்கு 97 தேஜஸ் இலகுரக போர் விமானங்களும் 156 பிரசாந்த் போர் ஹெலிகாப்டர்களும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தலைமையிலான ஆயுத கொள்முதல் கவுன்சில் (டிஏசி) இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் இந்தியா கடந்த மூன்றாண்டுகளாக சீனாவுடன் சிறிய சிறிய மோதல்களை எதிர் கொண்டுவரும் நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தக் கொள்முதலில் 98 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்தே வாங்கப்படவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆத்மநிர்பர்தா (சுய சார்பு) இலக்கை நோக்கிய முன்னெடுப்பாக இதனை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தால் நிர்வாகிக்கப்படும் சு-30 போர் விமானங்களை மேம்படுத்தவும் டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.
இவை தவிர, தானியங்கி இலக்கு கண்காணிக்கும் ட்ராக்கர் டி-90 டாங்கிகளுக்கான எண்ம கணினி, மத்திய தர கப்பல் தாக்கும் ஏவுகணை ஆகியவையும் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
மேலும் படிக்க: உத்தரகண்ட் சுரங்கத் தொழிலாளர்கள் வீடு திரும்ப அனுமதி!
போர் உபகரணங்களுக்காக வெளிநாட்டைச் சார்ந்திருக்கும் தேவையை இது குறைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


