போர்க்களத்தில் இருக்கிறோம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

பாலஸ்தீனத்திலிருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள்  நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்கிய நிலையில், போர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
பெஞ்சமின் நெதன்யாஹு
பெஞ்சமின் நெதன்யாஹு


டெல் அவிவ்: பாலஸ்தீனத்திலிருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள்  நூற்றுக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்கிய நிலையில், போர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.

இஸ்ரேல் மக்களே, நாம் இப்போது போர்க்களத்தில் இருக்கிறோம். ஒரு நடவடிக்கை எடுக்காமல் வெற்றியைப் பெற முடியாது.. போர்தான் என்று நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ வெளியிட்டுள்ளார்.

நாம் இப்போது போர்க்களத்தில் உள்ளோம். போரில் வெல்வோம் என்று அவர் விடியோவில் தெரிவித்துள்ளார். நமது எதிரி அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும், இதுவரை அவர் கண்டிராத வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், போர் அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டிருக்கிறார். ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேலில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். 100 பேர் காயமடைந்துள்ளனர். 

இஸ்ரேலின் மையப்பகுதியும் தெற்குப்பகுதியிலும் சனிக்கிழமை காலை 3.5 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான ராக்கெட் தாக்குதலுக்கு உள்ளாகியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

"இஸ்ரேல் ஒரு அவசரநிலையில் உள்ளது" மற்றும் ஹமாஸின் ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு "கடுமையான இராணுவ பதிலடியை" லாபிட் ஆதரிப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலக அறிக்கை கூறியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com