ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சிரிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமானப் படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

News image
Updated On :12 அக்டோபர் 2023, 3:41 pm

DIN

சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் இன்று (அக். 12) வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமானப் படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. 

பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சிரியாவிலுள்ள டமாஸ்கஸ் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைனி அமீர் அப்துல்லாஹின் வந்த விமானம் அந்த விமான நிலையத்தில் தரையிறங்குவதாக இருந்தது. 

இந்தத் தாக்குதலால், அந்த விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு திருப்பப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.