அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!

இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் சனிக்கிழமை (அக்.14) திறந்து வைக்கப்பட்டது.
அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!

வாஷிங்டன்: இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் சனிக்கிழமை (அக்.14) திறந்து வைக்கப்பட்டது.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள், அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 1891-ஆம் ஆண்டு பிறந்த பி.ஆா். அம்பேத்கா், இந்திய அரசியல் நிா்ணய சபையில் அரசமைப்பு வரைவுக் குழுத் தலைவராக இருந்து அரசமைப்பை வடிவமைப்பத்தில் முக்கிய பங்காற்றினாா். பண்டித ஜவஹா்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராகப் பணியாற்றினாா். ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு சமூக இயக்கங்களை அம்பேத்கா் முன்னின்று நடத்தினாா்.

அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அம்பேக்தா் சா்வதேச மையத்தில் (ஏஐசி) ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்ட 19 அடி முழுஉருவ அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அம்பேத்கா் புத்த மதத்தில் தன்னை இணைத்துக் கொண்ட நாளான அக்டோபா் 14-ஆம் தேதி இந்தச் சிலை திறக்கப்பட்டது.

இந்தச் சிலையை பிரபல சிற்பி ராம் சுதாா் வடிவமைத்துள்ளாா். இவா் குஜராத் நா்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள ‘ஒற்றுமையின் சிலை’ என்றழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேல் சிலையை வடிவமைத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com