காஸாவில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை!

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொலை!

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 20 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய பத்திரிகையாளர் சிண்டிகேட் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த அக்.7 முதல் போர் தொடர்ந்து வருகின்றது. தெற்கு இஸ்ரேலின் பல்வேறு இடங்களில் ஹமாஸ் படையினருடன் அந்நாட்டு ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்ந்து 11வது நாளாக செவ்வாய்க்கிழமையும் வன்முறை நீடித்து வருகிறது. காஸாவில் ஹமாஸ் படையினரின் நிலைகளைக் குறிவைத்து, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை நீத்து வருகின்றனர். பலர் காயமடைந்துள்ளனர். லட்சக் கணக்கானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தகவல் சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து சிண்டிகேட் வெளியிட்ட தகவலில், 

காசாவை ஆளும் பாலஸ்தீனிய இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம்(ஹமாஸ்) மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு பத்திரிகையாளர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும், காஸாவில் இதுவரை 11 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

காஸாவில் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் இணையப் பிரச்னைகள் நிலவி வருகின்றது. ஆனால் அதுபற்றிய தகவல்களை சேகரிப்பதை பத்திரிக்கையாளர்கள் குறைத்துள்ளனர். 

பல பத்திரிகையாளர்களுக்கு சமூக ஊடகத்தளங்களில் இஸ்ரேலின் நேரடி அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com