
காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எல்லைக்கோடு பகுதியில் சிறப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் 14வது நாளாக நீடித்து வருகிறது. அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் அன்று உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து காஸா மீது அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளும் அடுத்தடுத்து பதிலடி கொடுத்து வருகின்றன. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். காஸாவில் 3,478 பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதுவரை ராக்கெட்டுகள், குண்டுகள் மூலம் பெரும்பாலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தங்களின் அடுத்தகட்ட தாக்குதலாக தரைவழித்தாக்குதல் இருக்கும் என இஸ்ரேல் அறிவித்திருந்தது.
இதனொரு பகுதியாக காஸா எல்லையில் சிறப்புப் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர், காஸா எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.