மாதம் ரூ.5.6 லட்சம்: துபை லாட்டரியில் தமிழருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

அடுத்த 25 ஆண்டுகளுக்கு, மாதம் தோறும் ரூபாய் 5.6 லட்சம் அவருக்கு பரிசாக வழங்கப்படும்.
மகேஷ்குமார் குடும்பத்தினருடன்
மகேஷ்குமார் குடும்பத்தினருடன்

அதிர்ஷ்டம் எதிர்பாராத நேரத்தில் சிலருக்குக் கிடைக்கும். ஆனால், அவர்களின் அதுநாள் வரையிலான வாழ்க்கையையே மாற்றும் நிகழ்வாக அது அமைந்துவிடும்.

அப்படியான நிகழ்வு, துபையில் வசிக்கும் தமிழரான மகேஷ்குமார் நடராஜனுக்கு நிகழ்ந்துள்ளது. துபையின் மிகப்பெரிய லாட்டரி குலுக்கலில் ஒன்றான ஃபாஸ்ட்5 கிராண்ட் லாட்டரி பரிசை இவர் வென்றுள்ளார். 

இதில் வென்றவருக்கான பரிசு, அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் 25,000 திராம் (இந்திய மதிப்பில் ரூபாய் 5.6 லட்சம்) வழங்கப்படும்.
 
ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ்குமார் 2019-ல் துபைக்கு 4 வருட ஒப்பந்த அடிப்படையில் திட்ட மேலாளாராகப் பணியாற்ற சென்றுள்ளார். துபை சென்ற பிறகு தான் இது போன்ற குலுக்கல் இருப்பது அவருக்கு தெரிய வந்துள்ளது.

பரிசு வென்ற பிறகு மகேஷ்குமார் தெரிவித்தாவது, “என்னுடைய வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்துள்ளேன். என் சமூகத்தைச் சார்ந்த  பலர் படிப்பதற்கு உதவி செய்து தான் நான் படித்தேன். இந்தச் சமூகத்திற்கு திருப்பி செய்வதற்கான நேரம் இது. சமூகத்தில் தேவையுள்ளவர்களுக்கு நான் நிச்சயம் இந்தத் தொகையை வைத்து உதவி செய்வேன்” என்று கூறியுள்ளார்.

49 வயதான மகேஷ்குமாருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது படிப்புக்கு இதனைப் பயன்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com