சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை: இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை

பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்தில் காயங்களும் சிராய்ப்புகளும் இருந்தன. அவளது காதலரால் கூட அடையாளம் காண இயலாத அளவுக்கு முகத்தில் காயங்கள் இருந்தன.
சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை: இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூர் நீதிமன்றம், 26 வயதுள்ள இந்தியர், சின்னய்யா என்பவருக்கு 16 ஆண்டுகள் சிறையும் 12 சவுக்கடிகளும் தீர்ப்பாக வழங்கியுள்ளது. 

2019-ல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடத்தல் மற்றும் திருட்டு குற்றங்களும் இதில் சேரும்.

2019, மே 4-ம் தேதி தூய்மை பணியாளராகப் பணியாற்றிய சின்னய்யா, பின்னிரவு நேரத்தில் கல்லூரி மாணவி ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, தாக்கி அவரை மறைவான காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

முகமெல்லாம் காயங்களும் சிராய்ப்புகளும் கீறல்களும் கழுத்து நெறிக்கப்பட்ட தடயங்களுடன் அந்தப் பெண் அவரது காதலரால் கூட அடையாளம் காட்ட முடியாத நிலையில் மீட்கப்பட்டார்.

அடுத்த நாளே சின்னய்யா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு 4 ஆண்டுகள் எடுத்து கொண்டதற்கு காரணம் சின்னய்யாவின் மனநிலையைச் சோதிக்க பல சுற்று உளவியல் மதிப்பீடு செய்யப்பட்டது என நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.

குற்றத்தின் ஆழத்தைக் கருத்தில் கொண்டும் ஜுலை 13, 2023-ல் மாணவியின் வாக்குமூலமான, துர்கனவுகளும் அன்று நடந்த நினைவுகளும் தற்கொலை எண்ணங்களும் தொடர்ச்சியாக வருவதாக அவர் குறிப்பிட்டதைக் கருத்தில் கொண்டும் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 சவுக்கடிகளும் கோரப்பட்டன. 

இந்த நிலையில் அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 சவுக்கடிகளும் தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com