வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

23 சந்தேக நபர்கள் கைது: இஸ்ரேல் ராணுவம்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 23 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப் படம்.

Updated On :29 அக்டோபர் 2023, 10:26 am

DIN

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 23 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அக்டோபர் 7ஆம் தேதிமுதல் போர் நடைபெற்று வருகிறது. 3 வாரங்களைக் கடந்து நீடித்துவரும் இப்போரில் இஸ்ரேல் படையினர் காஸா எல்லைக்குள் தரை வழியாக நுழைந்துள்ளனர்.  வான் வழி, கடல் வழி தாக்குதல்களைத் தொடர்ந்து தரை வழியாக நடத்தப்படும் இந்தத் தாக்குதலை இஸ்ரேல் - ஹமாஸ் போரின் 2ஆம் கட்டம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். 

தரை மார்க்கமாக நுழைந்து காஸா பரப்புக்கு மேலேயும், காஸா பதுக்குக் குழிக்குள்ளும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இந்தப் போர் நீடிக்கும் சூழலே இருப்பதாகவும் நெதன்யாகு தெரிவிக்கிறார். இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நான்கு ஹமாஸ் போராளிகள் உட்பட குறைந்தது 23 சந்தேக நபர்கள் ஒரே இரவில் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

போர் தொடங்கியதில் இருந்து 700 ஹமாஸ் போராளிகள் உட்பட 1,030 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் கைது செய்யப்பட்டு இஸ்ரேலிய சிறைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது என்று பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.