கஜகஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 42 பேர் உயிரிழப்பு!

கஜகஸ்தான் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 42 பேர் உயிரிழப்பு!

கஜகஸ்தானின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர்.  மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 
Published on

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

அப்போது அங்கு 250-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளனர். தீயானது விரைந்து அப்பகுதி முழுவதும் பரவியது. இந்த விபத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து தீவிபத்து குறித்து விசாரணை நடத்த கஜகஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. மீத்தேன் வாயு கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கோர விபத்தையடுத்து கஜகஸ்தானில் நேற்றைய தினம் (அக்டோபர் 29) துக்க தினமாக அனுசரிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com