கனடாவில் விசா வழங்குவதை நிறுத்தியது இந்திய தூதரகம்

கனடாவில் விசா வழங்குவதை நிறுத்தியது இந்திய தூதரகம்

கனடா நாட்டில் விசா வழங்கும் நடைமுறையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் நிறுத்தியிருக்கிறது.
Published on


இருநாடுகளுக்கும் இடையே தூதரக உறவில் சிக்கல் எழுந்திருக்கும் நிலையில், கனடா நாட்டில் விசா வழங்கும் நடைமுறையை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் நிறுத்தியிருக்கிறது.

விசா வழங்கும் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியதால், கனடாவிலிருந்து இந்தியாவுக்கு யாரும் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கனடா - இந்தியா இடையேயான உறவில் விரிசில் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து கனடா செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு நேற்று பயண எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கனடாவிலிருந்து வருவோருக்கு விசா வழங்குவதை இந்திய தூதரகம் இன்று  நிறுத்தியிருக்கிறது.

இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் (45) கனடாவில் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு உள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி வெளியேறுமாறும் கனடா அரசு உத்தரவிட்டது.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இந்திய அரசு, பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயா் அதிகாரி வெளியேற உத்தரவிட்டது.

இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com