
turkey093359
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து துருக்கி மெல்ல மீண்டு வருவதாக வணிகத் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி 6-ம் தேதி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தால் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்கள் இந்த நிலநடுக்கத்தில் பலிவாங்கியது. லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பல கட்டடங்கள் நொறுங்கி தரைமட்டமானது.
இந்நிலையில், துருக்கியில் சுற்றுலாத் துறை மெல்ல மீண்டு வருவதாகவும், நிலநடுக்கத்துக்கு ஒன்றரை மாதத்துக்குப் பிறகு சுற்றுலா முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு
கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக துருக்கிய பயண முகவர் சங்கத்தின் ஆலோசகர் ஹமீத் குக் கூறினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
கரோனா தொற்றுநோயிலிருந்து மீண்டுவரும் நிலையில், நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்திவிட்டது. இதனால் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இருப்பினும், துருக்கிய லிரா நாட்டின் சுற்றுலாத் துறையின் போட்டித்தன்மையை வலுப்படுத்தியுள்ளது.
இந்தாண்டு, மாணவர்களுக்கு தேர்வு முடிந்துள்ள நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகைதருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் இரண்டு மில்லியன் மக்கள் பணியாற்றும் சுற்றுலாத் துறை, துருக்கியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடந்த 2022-ல், துருக்கி 51.3 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர். அதன்படி, சுற்றுலா வருவாயில் $46.3 பில்லியன் வருவாய் ஈட்டப்பட்டது. 2019-ல் $38.5 பில்லியனாக இருந்தது என்று துருக்கிய புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை இந்தாண்டு 56 பில்லியன் டாலர் வருவாயையும், ஐந்தாண்டுகளில் 100 பில்லியன் டாலர்களையும் வருவாய் ஈட்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது என்று அவர் கூறினார்.