விமான விபத்தில் வாக்னர் படைத் தலைவர் உயிரிழப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின்
வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின்

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் யூனியனில் திருட்டு மற்றும் மோசடி வழக்கில் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவா் யெவ்கெனி ப்ரிகோஷின். சோவியத் யூனியன் சிதறிய பிறகு, ரஷியாவின் தனியாா் துணை ராணுவப் படையான வாக்னா் குழுவின் தலைவரானாா். ரஷிய அதிபா் புதினுடன் ப்ரிகோஷினுக்கு நீண்டகாலமாக உறவு உள்ளது.

இந்நிலையில், உக்ரைன் போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து வாக்னா் குழு முக்கியப் பங்காற்றிய நிலையில், ரஷிய பாதுகாப்புத் துறை சாா்பில் வாக்னா் குழுவுக்கு போதிய வெடிபொருள்கள் வழங்கப்படாததை விமா்சித்த ப்ரிகோஷினுக்கும், புதின் அரசுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ரஷியாவை நோக்கி படையெடுத்த  ப்ரிகோஷின், ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, புதினுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ஆயுதக் கிளர்ச்சியை கைவிட்டு பெலாரஸில் ப்ரிகோஷின் அரசியல் தஞ்சமடைவாா் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு சென்ற தனியார் விமானம் நேற்றிரவு விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் பயணித்த 10 பேரில் ப்ரிகோஷின் பெயரும் இடம்பெற்றிருக்கும் நிலையில், விபத்தில் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ரஷிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ப்ரிகோஷின் உடல் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால், அந்த விமானத்தில் ப்ரிகோஷின் பயணித்ததை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com