
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரிட்டனில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் தேசிய விமானப் போக்குவரத்து சேவையில் தொழில்நுட்பக் கோளாறு(Network failure) ஏற்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கணினி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் நிலைமை சீரடையும் என்றும் அந்த நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பிரிட்டனில் இருந்து செல்லும் மற்றும் பிரிட்டனுக்கு வரும் விமானங்களின் சேவை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு வரும் விமானங்கள் அண்டை நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதையும் படிக்க | பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் கார் பரிசு! - ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...