சுதந்திரமாக வாழ முடியவில்லை: ஏஞ்சலினா ஜோலி

விவாகரத்துக்குப் பிறகான சூழல் குறித்து ஏஞ்சலினா ஜோலி பேசியுள்ளார்.
ஏஞ்சலினா ஜோலி | கோப்புப் படம்
ஏஞ்சலினா ஜோலி | கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இன்று நடிக்க ஆரம்பித்திருந்தால் நிச்சயம் நடிப்பைத் தனது துறையாகத் தேர்ந்தேடுத்திருக்க மாட்டேன் என ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தெரிவித்துள்ளார்.

வால் ஸ்டீரிட் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்த ஜோலி, “நான் இன்று நடிகையாக இருந்திருக்க மாட்டேன். எனது கேரியரை ஆரம்பித்தபோது நடிகர்களின் தனிவாழ்வு இத்தனை பொதுவில் இல்லை, அதிகம் பகிர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

2016-ல் ஹாலிவுட் நடிகரும் ஜோலியின் கணவருமான பிராட் பிட் உடன் விவாகரத்து பெற்ற பிறகு ஊடங்களின் இலக்காகத் தான் மாறியது அழுத்தத்தைக் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அழுத்தம் அவரது படத்தின் வேலையில் பிரதிபலித்துள்ளது. முகத்தசைவாதம் ஏற்படும் அளவுக்கு அழுத்தம் காரணமாக அமைந்ததாகவும் இந்த நாள்களில் அவருக்குச் சமூக வாழ்வு என்று ஒன்று இருக்கவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து வெளியேறவிருப்பதாகவும் கம்போடியாவுக்கு செல்லத் திட்டமிடுவதாகவும் தெரிவித்த ஜோலி, “எனது விவாகரத்தின் பகுதியாக நிகழ்ந்தது இது. சுதந்திரமாக வாழும் பயணிக்கும் திறனை இழந்துள்ளேன். நான் மிகவும் அமைதியான இடத்தில் வளர்ந்தேன். உலகின் எந்த இடத்தைக்காட்டிலும் ஹாலிவுட் ஆரோக்கியமான இடமல்ல, இங்கு நீங்கள் நம்பகத்தன்மையைத் தேட வேண்டியிருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை, கடந்த எட்டு வருடங்களில் 2 படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com