இஸ்ரேல்- ஹமாஸ் போர் மூன்றாவது மாதமாகத் தொடர்ந்துவரும் நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இஸ்ரேல் வீரர்களின் பொருத்தமற்ற செயல்களை மேற்கொள்ளும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சர்வதேச அளவில் இஸ்ரேலின் போர் நெறிகள் குறித்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்துவரும் நிலையில் இஸ்ரேல் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வது இஸ்ரேலுக்கு தலைவலியை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
வைரலாகிவரும் விடியோவில் இஸ்ரேலிய வீரர்கள் காஸாவில் உள்ள பொம்மை கடை ஒன்றைத் தகர்ப்பதும் பொம்மைகளின் தலையைத் துண்டிப்பதும் கைவிடப்பட்ட உணவு மற்றும் குடிநீர் டிரக்கை தீயிட்டு கொளுத்துவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வெறுப்பு பிரசாரப் பாடல்களைப் பாடி இஸ்ரேல் வீரர்கள் வட்டமாக நடனமிடுவது போலான விடியோக்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவு பொருள்கள் உள்ள டிரக்கைக் கொளுத்தும் இஸ்ரேலிய வீரர்கள் | AP
போருக்கு இடையில், வீரர்கள் இவ்வாறு பொருத்தமில்லாது தீங்கிழைக்கும் வகையில் நடந்து கொள்வது இது முதல் முறை இல்லை.
இருப்பினும், சமீபத்திய விடியோக்கள் தேசத்தின் ஒட்டுமொத்த மனநிலையைக் காண்பிப்பதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“மனிதநேயமற்ற தன்மை தலைவர்களிடம் இருந்து வீரர்களுக்குக் கடத்தப்பட்டுள்ளது” என்கிறார் இஸ்ரேலிய மனித உரிமைகள் செயல்பாட்டாளர் டிரார் சடோட்.
மேலும், ஒரு இஸ்ரேல் வீரர் காஸாவின் வீட்டிற்குள் நுழைந்து அலமாரிகளில் உள்ள உள்ளாடைகளைப் படமெடுக்கிற விடியோ ஒன்றும் மற்றொரு வீரர் இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கான விரிப்புகளைக் கழிவறையில் தூக்கி வீசுகிற விடியோவும் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: காஸாவில் 25 மருத்துவமனைகள் முடக்கம்
இந்த நிகழ்வுகள், இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பின் நெறிகளுக்குப் பொருந்தாது, ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


