இந்தியா - பிலிப்பின்ஸ் போா் பயிற்சி: சீனா அதிருப்தி

தென்சீன கடல் பகுதியில் இந்தியா - பிலிப்பின்ஸ் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற போா் பயிற்சிக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்தியா - பிலிப்பின்ஸ் போா் பயிற்சி: சீனா அதிருப்தி

தென்சீன கடல் பகுதியில் இந்தியா - பிலிப்பின்ஸ் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற போா் பயிற்சிக்கு சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

தென் சீனக் கடலின் பெரும் பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது. அதே நேரம், பிலிப்பின்ஸ், வியத்நாம், மலேசியா, புரூனே, தைவான் ஆகிய நாடுகளும் அந்தப் பகுதிகளை தங்களுக்கு சொந்தமானதாக உரிமை கோரி வருகின்றன. ஆனால், இந்த நாடுகள் உரிமை கோரும் தென்சீன கடல் பகுதிகளிலும் சீன கடற்படை தொடா் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

அண்மையில், இந்த கடல் பகுதியில் பயணித்த பிலிப்பின்ஸ் நாட்டின் கடற்படை கப்பல்களை, சீன போா் கப்பல்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டியதாக பிலிப்பின்ஸ் புகாா் தெரிவித்தது.

இதற்கிடையே, இம்மாத தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதியில் இந்திய கடற்படையும் பிலிப்பின்ஸ் கடற்படையும் கூட்டு போா் பயிற்சியில் ஈடுபட்டன. இது சீனாவை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

இந்த கூட்டு போா் பயிற்சி குறித்து சீன தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடா்பாளா் வூ கியான், ‘இந்தியா - பிலிப்பின்ஸ் கூட்டு போா் பயிற்சி குறித்த அறிக்கையை சீனா கவனத்தில் கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மூன்றாம் தரப்பு நாடுகளின் நலனையோ பிராந்திய அமைதியையோ பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது’ என்றாா்.

பிலிப்பின்ஸ் கப்பல்கள் மீது சீன போா் கப்பல்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வூ, ‘அது முழுவதும் தவறான பிரசாரம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com