

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் பலியாகியிருப்பதை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் 9 மணி நேரத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னதிா்வு வழக்கத்துக்கு மாறாக மிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ரிக்டா் அளவுகோலில் அந்த அதிா்வு 7.5 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின.
துருக்கியின் நவீன கால வரலாற்றில், அந்த நாடு சந்தித்துள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தனா். இந்த நிலையில் துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் பலியாகியிருப்பதை இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
தொழில் நிமித்தமாக துருக்கி சென்ற அவரின் உடலை மலாத்யா பகுதியில் இருந்து கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பிப்ரவரி 6 ஆம் தேதி நிலநடுக்கத்தில் இருந்து காணாமல் போன இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீவிஜய் குமாரின் உடல் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.