வாரத்தில் 4 நாள்களே வேலை! பிரிட்டனில் சோதனைத் திட்டம் வெற்றி!!

பிரிட்டனில் நடத்தப்பட்ட ‘வாரத்தில் 4 நாள்கள் வேலை’ சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 4 நாள்களே வேலை! பிரிட்டனில் சோதனைத் திட்டம் வெற்றி!!

பிரிட்டனில் நடத்தப்பட்ட ‘வாரத்தில் 4 நாள்கள் வேலை’ சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாரத்தில் 4 நாள்கள் வேலை செய்யும் சோதனை திட்டத்தை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் செயல்படுத்தின.

இதுகுறித்து ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்ட பாஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான ஜூலியட் ஷோர் கூறுகையில்,

இந்த சோதனையில் சில சுவாரசியமான வேறுபாடுகள் காணப்பட்டன. பணியாளர்கள் தங்களின் வேலை நேரத்தை சராசரியாக அதிகரித்ததை நாங்கள் கண்டோம். அதேபோல், கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்படும் தீக்காயம் மற்றும் தூக்க பிரச்னைகள் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது என்றார்.

4 நாள்கள் வேலை திட்டத்தின் சோதனையின் முடிவில், பெரும்பாலான நிறுவனங்கள் இந்த முறையை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர். கிட்டத்திட்ட 91 சதவிகிதம் நிறுவனங்கள் இந்த திட்டத்தை தொடரப்போவதாகவும், 4 சதவிகிதம் நிறுவனங்கள் இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், 4 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே இந்த திட்டத்தை தொடரப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த சோதனைக்கு சராசரியாக 10-க்கு 8.5 மதிப்புகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. வணிக உற்பத்தித் திறன் மற்றும் வணிக செயல்திறன் பிரிவுகளுக்கு 7.5 சதவிகித மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த ஆண்டை இதே காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில், நிறுவனங்களின் வருவாய் சுமார் 35 சதவிகிதம் அதிகரித்ததுடன் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com