பாகிஸ்தானை மோடி ஆட்சி செய்தால்... இஸ்லாமியரின் வைரலாகும் விருப்பம்!

பாகிஸ்தான் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி செய்ய வேண்டும் என இஸ்லாமியர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
பாகிஸ்தானை மோடி ஆட்சி செய்தால்... இஸ்லாமியரின் வைரலாகும் விருப்பம்!
Published on
Updated on
1 min read


பாகிஸ்தான் நாட்டை பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி செய்ய வேண்டும் என அந்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாகிஸ்தான் பிரிவினை நடக்காமல் இருந்திருக்கலாம் என்றும், பாகிஸ்தானையும் மோடி ஆட்சி செய்திருந்தால் அத்தியாவசிய பொருள்களை குறைந்த விலையிலேயே வாங்கியிருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளரும், யூடியூபருமான சனா அம்ஜத் என்பவர் பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரிஃப் ஆட்சி குறித்து அந்நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பி அதனை விடியோவாக பதிவேற்றம் செய்துள்ளார். 

அதில் பேசிய பாகிஸ்தான் இஸ்லாமியர் ஒருவர் இங்கு நரேந்திர மோடி ஆட்சி நடைபெற்றிருக்கலாம் எனக் கருத்து தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது, ''இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரிக்காமல் இருந்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், அத்தியாவசியப் பொருள்களை நேர்மையான விலைக்கு வாங்கி எங்கள் குழந்தைகளுக்கு கொடுத்திருப்பேன்.  தக்காளியை கிலோ 20 ரூபாய்க்கும், கோழிக்கறியை கிலோ 150 ரூபாய்க்கும் வாங்கியிருப்பேன். 

நம் நாடு (பாகிஸ்தான்) தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாமிய நாடாக நிலைத்துவிட்டது. ஆனால், இஸ்லாம்தான் இங்கு முழுமையாக நிலைக்கவில்லை. பாகிஸ்தான் பிரதமருடன் ஒப்பிடும்போது நரேந்திர மோடியின் ஆட்சி சிறந்ததுதான். அந்நாட்டு மக்கள் அவரை மதிக்கின்றனர். பின்பற்றுகின்றனர். அவர் பாகிஸ்தானுக்கும் கிடைத்திருந்தால், அனைத்து பிரச்னைகளையும் கையாண்டிருப்பார். அப்படி அவர் கிடைத்தால், நமக்கு செபாஷ் செரீஃப், பெனாசீர், இம்ரான், ஏன் முஷாரஃப் கூடத் தேவையில்லை. உலக அளவில் இந்தியா 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது'' எனக் குறிப்பிட்டார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com