சீனப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: ஆஸ்திரேலியா அறிவிப்பு

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என ஆஸ்திரேலியா மற்றும் கனடா தெரிவித்துள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என ஆஸ்திரேலியா மற்றும் கனடா தெரிவித்துள்ளன.

உலகின் பல நாடுகளும் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ள நிலையில் தற்போது அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவும், கனடாவும் இணைந்துள்ளன.

சீனாவில் கரோனா பரவல் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனைக் கட்டாயம் என அறிவித்தது. கரோனாவின் சரியான தரவுகளை குறிப்பிடமால் சீனா மறைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. சீனாவின் இந்த செயலால் புதிய வகை கரோனா திரிபு பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. அதன் காரணத்தினாலேயே சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் கனடா சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது குறித்த அறிக்கையில் ஆஸ்திரேலியா நிர்வாகம் கூறியிருப்பதாவது: சீனா மற்றும் ஹாங் காங் ஆகிய நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகளுக்கு அவர்களது பயணத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை கட்டாயம். இந்த நடைமுறை வருகிற ஜனவரி 5 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போன்று கனடாவும் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com