

ஒட்டாவா: கனடாவில் வெளிநாட்டவர்கள் 2 ஆண்டுகளுக்கு குடியிருப்பு சொத்துக்களை வாங்குவதற்கான தடை விதித்து இயற்பட்ட சட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
கனடாவில் வீடுகள் உள்ளிட்ட சொத்துகளின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து, கனடாவில் வெளிநாட்டவர்கள் 2 ஆண்டுகளுக்கு குடியிருப்பு சொத்துக்களை வாங்குவதற்கான தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் புதிய சட்டத்தில் அகதிகள் மற்றும் குடிமக்கள் அல்லாத நிரந்தர குடியிருப்பாளர்கள் போன்ற தனிநபர்கள் வீடுகளை வாங்குவதற்கு அனுமதிக்கின்றன.
வீடுகள் உள்ளிட்ட சொத்துகளின் விலை உயர்ந்துள்ளதை அடுத்து அமல்படுத்தப்பட்டுள்ள இந்த தடை சட்டம், நகர குடியிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கோடைகால குடிசைகள் போன்ற பொழுதுபோக்கு சொத்துக்களுக்கு அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தடை நகர குடியிருப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.