சீனாவின் முதல் முறையாக இப்படி நிகழ்ந்துள்ளது.. அது இந்தியாவை பாதிக்குமோ?

சீனாவில் முதல் முறையாக, கடந்த ஆண்டு மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்துள்ளது.


பெய்ஜிங்: 1961ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனாவின் மையமாக விளங்கும் சீனாவில் முதல் முறையாக, கடந்த ஆண்டு மக்கள் தொகைப் பெருக்கம் குறைந்துள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகைப் பெருக்க சரிவு என்பது, நீண்ட கால சரிவின் ஆரம்பப் புள்ளியாக இருக்கக் கூடும் என்று கருதப்படும் நிலையில், 2023ஆம் ஆண்டு அதிக மக்கள் தொகைப் பெருக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடிப்பதைக் காணலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்க.. இருவரின் கொள்கைகளும் ஒத்துப்போகவில்லை.. புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்

சீனாவில் 2022ஆம் ஆண்டு இறுதியில் 1.41175 பில்லியன் மக்கள் தொகை பதிவாகியிருக்கிறது. இது 2021ஆம் ஆண்டு இறுதியில் 1,41260 பில்லியனாக இருந்ததாக நாட்டின் தேசிய புள்ளியியல் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு சீனாவின் பிறப்பு விகிதமானது 1,000 பேருக்கு 6.77 பிறப்பு என்ற விகிதத்தில் பதிவாகியுள்ளது. இது கடந்த 2021ஆம் ஆண்டு 7.52 ஆக இருந்துள்ளது. இதன் மூலம், அந்நாட்டில் பதிவான மிகக் குறைந்த பிறப்பு விகிதம் இதுவாகும்.

அது மட்டுமல்லாமல், கடந்த 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனாவில் மிக அதிகமான இறப்பு விகிதமும் பதிவாகியிருக்கிறது. அதன்படி, 1,000 பேரில் 7.37 பேர் மரணம் என்ற விகிதத்தில் பதிவாகியிருக்கிறது. இது 2021ஆம் ஆண்டு 7.18 ஆக இருந்தது.

சீனாவில் 1980 - 2015 வரை பின்பற்றப்பட்ட ஒரு குழந்தை கொள்கை மற்றும், கல்விக்கு அதிகப்படியான செலவு போன்றவை அந்நாட்டில் பல தம்பதிகள் ஒரு குழந்தை அல்லது குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டதும் இந்த சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த மூன்று ஆண்டுகளாக கரோனா நிலவரம் மக்களை அச்சுறுத்தி வருவதும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துவிட்டிருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டி, 2021ஆம் ஆண்டு முதல் சீன அரசு, அந்நாட்டு மக்களை அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும்படி கெஞ்சி வருகிறது. வரிச் சலுகை, அதிக நாள்கள் மகப்பேறு விடுமுறை, வீட்டுக்கு மானியம் என பல திட்டங்களை அறிவித்தும் வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com