சிறுவனின் துண்டான தலையை ஒட்டவைத்த மருத்துவர்கள்

சிறுவனின் துண்டான தலையை ஒட்டவைத்த மருத்துவர்கள்

இஸ்ரேல் நாட்டில், சாலை விபத்தொன்றில், கிட்டத்தட்ட துண்டான சிறுவனின் தலையை மீண்டும் உடலோடு ஒட்டவைத்து மருத்துவர்கள் மகத்தான சாதனையைப் படைத்துள்ளனர். 
Published on


இஸ்ரேல் நாட்டில், சாலை விபத்தொன்றில், கிட்டத்தட்ட துண்டான சிறுவனின் தலையை மீண்டும் உடலோடு ஒட்டவைத்து மருத்துவர்கள் மகத்தான சாதனையைப் படைத்துள்ளனர்.

சுலைமான் ஹஸ்ஸன் என்ற சிறுவனின் பைக் பயணம், அவனை இப்படியொரு நிலைக்குத் தள்ளும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஜெருசலேம் பகுதியல், மிக மோசமாக சாலையில் வாகனத்தை ஓட்டி வந்த நபர், பைக் மீது மோதியதில், கழுத்தில் எழும்பு உடைந்து, தசைகள் கிழிந்து, கிட்டத்தட்ட உடலிலிருந்து தலை துண்டான நிலையில்தான் ஹஸ்ஸன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுவனின் தலை துண்டாகியிருந்ததால், மீண்ட சிக்கலான, நீண்டநேர அவசர அறுவை சிகிச்சை தொடங்கியது.

இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஓஹத் இனாவ் கூறுகையில், மிகக் கொடுங்காயத்தால் சிறுவனின் கழுத்துப் பகுதியிலிருந்து தலைப்பகுதி கிட்டத்தட்ட தனியாக பிரிந்துவிட்டிருந்தது என்கிறார்.

இவர் உயிர் பிழைக்க 50 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மருத்துவமனையில் இருந்து அவர் வீட்டுக்குத் திரும்பிவிட்டதாகவும், அவரை மருத்துவ நிபுணர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com