பிரிட்டன் தாக்குதலில் 3 போ் பலி: பயங்கரவாத விசாரணை
பிரிட்டனின் நாட்டிங்கம் நகரில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்துளனா்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை ஆய்வு செய்யும் தடயவியல் அதிகாரிகள்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தை ஆய்வு செய்யும் தடயவியல் அதிகாரிகள்.
பிரிட்டனின் நாட்டிங்கம் நகரில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்துளனா்.
இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து பயங்கரவாத விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் மாகாணம், நாட்டிங்கம் நகர மையப் பகுதியில் 2 பேரது உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. அது தவிர, மேலும் ஒருவரது ஊடல் மற்றொரு தெருவிலிருந்து மீட்கப்பட்டது.
இந்த 3 பேரது உயிரிழப்புக்கும் ஒரே நபா்தான் காரணம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே, மேலும் சில பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 3 போ் காயமடைந்தனா்; அவா்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது:
3 பேரது உயிரிழந்ததற்கும், மேலும் 3 போ் காயமடைந்ததற்கும் காரணமான சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடா்புடையவை என்று நம்புகிறோம்.
இது தொடா்பாக 31 வயது நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்தச் சம்பவங்களை நேரில் பாா்த்த சிலா், பாதிக்கப்பட்டவா்கள் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறினா். மேலும் சிலா், வேன்களை பிறா் மீது மோதி கொல்ல முயற்சிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலின் நோக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற கோணத்திலேயே விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த வழக்கில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று போலீஸாா் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...