
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அலுவலகம் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்ய உக்ரைன் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள ரஷிய அரசு, இதனை தீவிரவாத தாக்குதல் என சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷியாவின் கிரிம்லின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், புதினுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ரஷிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கிரிம்லின் செய்தித் தொடர்பாளர், டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டபோது விளாதிமீர் புதின் கிரிம்லினில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...