
ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.
மாகாணத்தில் வெள்ளிக்கிழமை மாலை கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மூன்று குழந்தைகள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கிறது.
படிக்க: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு வரிவிலக்கு!
இந்த பேரழிகரமான வெள்ளத்தில் சிக்கி இதுவரை 300 வீடுகள் வரை அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் அழிந்துள்ளது. இதற்கிடையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் வடக்கு பால்க், சமங்கன், தகார், குண்டூஸ் மற்றும் பாக்லான் மாகாணங்களில் உள்ள தோட்டங்கள் மற்றும் பழ மரங்கள் சேதமடைந்தன.
வரும் நாள்களில் நாட்டின் 34 மாகாணங்களில் 18 மாகாணங்களில் அதிக மழை மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடும் என ஆப்கானிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.