துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் முன்னிலை

துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
எா்டோகன் - கெமால் கிலிச்டாரோலு
எா்டோகன் - கெமால் கிலிச்டாரோலு

துருக்கி அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 6 கட்சிகள் சார்பில் அதிபர் எர்டோகனுக்கு எதிராக போட்டியிடும் கிலிசிக் 44.7% வாக்குகுள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார். 
துருக்கியில் நாடாளுமன்றத் தோ்தல் மற்றும் அதிபா் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சித் தலைவரான எா்டோகனுக்கு (69) எதிராக குடியரசு மக்கள் கட்சித் தலைவரான கெமால் கிலிச்டாரோலு (74)எதிா்க்கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். 
தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் எா்டோகனைவிட எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் கெமல் அதிக வாக்குகள் பெறுவாா் எனத் தெரியவந்ததால் இந்தத் தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வேட்பாளா்களில் ஒருவா் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். 
அவ்வாறு பெறாவிட்டால் மே 28-ஆம் தேதி அதிபா் தோ்தல் மீண்டும் நடத்தப்படும். சுமாா் இருபது ஆண்டுகளாக அதிபா் பதவியில் இருந்து வரும் ரிசப் தயீப் எா்டோகனுக்கு இந்தத் தோ்தல் பெரும் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com