எகிப்து எல்லை வழியாக வெளியேறும் காஸா மக்கள்: விடியோ!

காஸாவில் இருந்து வெளியேறுவதற்கான தற்போதைய ஒரே வழி ராபா எல்லை தான்.
எகிப்து எல்லை வழியாக வெளியேறும் காஸா மக்கள்: விடியோ!

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத ராபா எல்லை வழியாக காஸாவிலிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

எகிப்தின் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடனான உடன்படிக்கையின் பேரில் வெளிநாட்டு கடவுச்சீட்டு கொண்டுள்ளவர்கள், காயமடைந்த பாலஸ்தீனர்கள் ஆகியோர் வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் காஸாவில் சிக்கியிருந்த தங்கள் நாட்டின் மக்கள் ராபா எல்லை வழியாக வெளியேறி இருப்பதை உறுதி செய்துள்ளன.

கடந்த வார இறுதியில் அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்தின் முன் நோயாளிகளை ஏற்றிச் செல்லவிருந்த அவசர ஊர்திகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வார இறுதியில் இந்த எல்லை மூடப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை (அக்.6) திறக்கப்பட்ட  எல்லை வழியாக ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அக்.7 தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் 32-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. போரில் 10,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com