

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் மனைவி ரோஸலின் கார்டர் நேற்று(நவ. 19) காலமானார். அவருக்கு வயது 96.
1977-81 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் 39-ஆவது அதிபராக இருந்தவர் ஜிம்மி கார்டர். இவரது மனைவி ரோஸலின் கார்டர், ஒரு சமூக ஆர்வலர், மனநல ஆலோசகர். ஜிம்மி கார்டர் அதிபராக இருந்தபோது, அவருக்கும் பெரிதும் உதவியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று(நவ. 18) காலமானார்.
இதையும் படிக்க | வடக்கு காஸாவில் மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேல் கடும் தாக்குதல்!
இந்நிலையில் ஜிம்மி கார்டர் தனது மனைவி குறித்து உருக்கமாகக் கூறியுள்ளார். 'நான் சாதித்த எல்லாவற்றிலும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார். எனக்குத் தேவையானபோது புத்திசாலித்தனமான வழிகாட்டுதலையும் ஊக்கத்தையும் கொடுத்தவர். ரோஸலின் இந்த உலகில் இருக்கும் வரை, யாரோ ஒருவர் என்னை நேசித்தார், ஆதரவாக இருந்தார் என்பதை உணர்ந்தேன்' என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர்களில் நீண்ட நாள் தம்பதி என்ற பெருமையை பெற்றுள்ள இவர்கள், கடந்த ஜூலை மாதம் தங்களது 77 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உக்ரைனுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் திடீர் பயணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.