காஸாவில் திரும்பும் அமைதி!

போர் நிறுத்த நாள்களில் காஸா மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை அதிகரிக்க வேண்டும் என கத்தார் தெரிவித்துள்ளது.
நிவாரண பொருள்களை எடுத்து செல்லும் பாலஸ்தீன சிறுவர்கள்
நிவாரண பொருள்களை எடுத்து செல்லும் பாலஸ்தீன சிறுவர்கள்

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இருதரப்புக்குமிடையே 4 நாள்களுக்கான போர் நிறுத்த உடன்படிக்கை நிறைவேறியுள்ளதாகக் கத்தார் தெரிவித்துள்ளது.

அக்.7 ஹமாஸின் தாக்குதலில் ஆரம்பித்து ஆறு வாரமாகத் தொடர்ந்துவரும் போரில் முதல் தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

போர் நிறுத்த காலமான 4 நாள்களில் முதல் நாளின் முடிவுக்குள் 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் எனத் தெரிவித்துள்ளார் கத்தாரின் வெளியுறவு அமைச்சர். இருதரப்புக்குமிடையே கத்தார் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவதாகவும் இந்த வேளையில் காஸா மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் கத்தார் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ள இஸ்ரேல், ஹமாஸின் கோரிக்கையாக தெரிவிக்கப்பட்ட 150 பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்வது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “நாம் போரில் இருக்கிறோம், போரைத் தொடர்வோம். நமது இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேலிய அரசு அனைத்து பிணைக்கைதிகளையும் வீட்டிற்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தி வருகிறது, அதன் முதல் படிதான் இந்த போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டது என இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com