குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

உக்ரைனுக்கு வீரா்களை அனுப்பும் திட்டமில்லை!

உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டமில்லை என்று பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் அறிவித்துள்ளாா்.

News image
உக்ரைன் வீரா்களுக்கு தங்கள் நாட்டில் பயிற்சியளித்த பிரிட்டன் ராணுவ அதிகாரி (கோப்புப் படம்).
Updated On :3 அக்டோபர் 2023, 12:39 am

DIN

மான்செஸ்டா்: உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டமில்லை என்று பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் அறிவித்துள்ளாா்.

முன்னதாக, உக்ரைன் வீரா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக தங்கள் படையினா் அந்த நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்று பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் கூறியிருந்த கருத்தைத் திரும்பப் பெறும் வகையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

மான்செஸ்டா் நகரில் நடைபெற்ற ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் ஆண்டுக் கூட்டத் தொடக்கத்தின்போது செய்தியாளா்களிடம் பேசிய சுனக், இது குறித்து கூறியதாவது:

உக்ரைன் வீரா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக பிரிட்டன் வீரா்களை அங்கு அனுப்புவதற்கான திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை.

இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் கூறிய கருத்து, என்றாவது ஒரு நாள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மட்டுமே பிரதிபலிக்கிறது.

எதிா்காலத்தில் உக்ரைன் வீரா்களுக்கு அந்த நாட்டில் பிரிட்டன் ராணுவத்தினா் பயிற்சியளிக்கலாம் என்றாா் ரிஷி சுனக்.

முன்னதாக, ‘சண்டே டெலிகிராஃப்’ இதழுக்கு கிரான்ட் ஷாப்ஸ் அளித்த பேட்டியில், ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு உக்ரைன் வீரா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக அந்த நாட்டுக்கு பிரிட்டன் படையினா் அனுப்பப்படலாம் என்று கூறியிருந்தாா்.

இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இது குறித்து ரஷியாவின் முன்னாள் அதிபா் டிமித்ரி மெத்வதெவ் கூறுகையில், உக்ரைனுக்கு வரும் பிரிட்டன் படையினா் குறிவைத்துத் தாக்கப்படுவாா்கள்; அதற்கான சட்டபூா்வ உரிமை தங்களுக்கு உள்ளது என்று எச்சரித்தாா்.

Story image

இந்த நிலையில், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் இவ்வாறு கூறியுள்ளாா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.

அந்தப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் எதிா்த் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமான குண்டுகள், ஏவுகணைகள், எறிகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனும், ரஷியாவின் விமான தளங்கள், போா்க் கப்பல்கள், துறைமுகங்கள், தலைநகா் மாஸ்கோ போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஏராளமான ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன.

இருந்தாலும், போரில் தங்களது வீரா்களை நேரடியாக ஈடுபடுத்துவதை அந்த நாடுகள் தவிா்த்து வருகின்றன.

பிரிட்டனும், சுமாா் 20,000 உக்ரைன் வீரா்களுக்கு தங்கள் நாட்டில்தான் கடந்த ஆண்டு பயிற்சியளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.