நீ என்னுடைய ஊழியராக இருந்தால்.. முதல் மனைவியிடம் எலான் மஸ்க் காட்டம்

அந்தப் புத்தகம், எலான் மஸ்க் - அவரது முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க் உடனான உறவு, அவர்கள் சந்தித்த சவால்களுடன் தொடங்கியிருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்-கின் வாழ்க்கை வரலாறு அண்மையில் வெளியாகியிருந்தது. அந்தப் புத்தகம், எலான் மஸ்க் - அவரது முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க் உடனான உறவு, அவர்கள் சந்தித்த சவால்களுடன் தொடங்கியிருந்தது.

மேலும், அதில், அவர்களிடையே ஏற்பட்ட காதல், சாவல்கள், விவாகரத்து என அனைத்தையும் விரிவாக எழுதியிருக்கிறார். அதில் ஒரு தலைப்பு இவ்வாறு இடப்பட்டுள்ளது. அதாவது, தொடக்கத்தில் நான் ஒரு மனைவியாக இருந்தேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், மனைவியை எலான் மஸ்க் எவ்வாறு கடினமான வார்த்தைகளால் கண்டிப்பார் என்பதும் விளக்கப்பட்டிருந்தது.

அதாவது, ஒருவேளை, நீ என் அலுவலக ஊழியராக இருந்திருந்தால், உன்னை பணி நீக்கம் செய்திருப்பேன் என்று அடிக்கடி எலான் மஸ்க் தனது முதல் மனைவியிடம் கூறியிருப்பதும், இதுவே அவர்களை விவாகரத்துக்கு இட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தின்படி, கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, ​​ஜஸ்டின், ஒரு எழுத்தாளராக ஆசைப்பட்டு, எலான் மஸ்க்கை சந்தித்தார், அவரை தென்னாப்பிரிக்க உச்சரிப்பு கொண்ட ஒரு அழகான மேல் வகுப்பு பையன் என்று அவர் விவரிக்கிறார். ஆரம்பத்தில், அவள் மஸ்கின் காதல் விளையாட்டுகளை ஆதரிக்கவில்லை. ஆனால் எலான் மஸ்க் எடுத்த விடாமுயற்சி, இவர்களை திருமணம் வரை கொண்டு சென்றது என்கிறார்.

ஜஸ்டின் இது குறித்து எழுதிய கட்டுரை ஒன்றில்,  "எலோனின் முடிவுகள் எப்போதும் என்னுடைய முடிவுகளை நிராகரித்தது, மேலும் அவர் தொடர்ந்து எனது குறைபாடுகளை சுட்டிக்காட்டினார். நான் உங்கள் மனைவி,' நான் அவரிடம் 'உங்கள் பணியாளர் அல்ல' என்று திரும்பத் திரும்பச் சொன்னேன். 'நீ என் பணியாளராக இருந்தால், உன்னை பணி நீக்கம் செய்துவிடுவேன்' என்று அடிக்கடி சொல்லுவார் என்று தெரிவித்திருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com