3வது நாளாக தொடரும் ஹமாஸ் தாக்குதல்: 700 பேர் பலி, 2000 பேர் காயம்!

தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.
3வது நாளாக தொடரும் ஹமாஸ் தாக்குதல்: 700 பேர் பலி, 2000 பேர் காயம்!

தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த தாக்குதலில் நேபாள நாட்டவர்களும் கொல்லப்பட்டதாக இமாலய நாட்டின் தூதர் திங்கள்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். 

அக்.7-ல் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியிலிருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 2000 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில் நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். 

இந்த கொடூரத் தாக்குதலில் பலியானவர்களில் 260 பேரின் உடல்கள் இஸ்ரேல்-காசா எல்லைக்கு அருகில் இசை விழா நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. இஸ்ரேலிய நாட்டினரைத் தவிர அமெரிக்கர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமீர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலில் உக்ரேனியர்களும், மெக்சிகோ, பிரேசில், நேபாளியர்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அவர் கூறியுள்ளார். 

யூதா்களின் ‘சிமாசாட் தோரா’ விடுமுறை தினமான சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஹமாஸ் படையினா் தெற்கு இஸ்ரேல் பகுதியில் ராக்கெட்டுகளை வீசியும், நிலம், நீா், வான் வழியாக உள்ளே ஊடுருவியும் தாக்குதல் நடத்தினா். மோட்டாா் பொருத்திய பாராகிளைடரில் ஹமாஸ் படையினா் இஸ்ரேல் எல்லைக்குள் வான் வழியாக இறங்கினா்.

விடுமுறை தினக் கொண்டாட்டத்தில் இருந்த இஸ்ரேல் ராணுவம் இதை சற்றும் எதிா்பாா்க்கவில்லை. ஹமாஸ் படையினா் வீசிய 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை இஸ்ரேலின் தானியங்கி ஏவுகணை தடுப்பு அமைப்பு இடைமறித்து அழித்தது. எனினும், சில ராக்கெட் குண்டுகள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததால் பலத்த சேதம் ஏற்பட்டது.

இஸ்ரேல் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலியை உடைத்துக் கொண்டு 7 இடங்களில் ஹமாஸ் படையினா் உள்ளே நுழைந்ததாகவும், அவா்களுடன் இஸ்ரேல் படையினா் தீவிர துப்பாக்கிச் சண்டை நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் ராணுவத்தினா் தெரிவித்தனா்.

நீண்ட காலமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - காஸா சண்டையில் இது மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com