நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.42,920-க்கு விற்பனை!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

News image
Updated On :9 அக்டோபர் 2023, 6:12 am

DIN

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

அதன்படி,சென்னையில்  அக்டோபர் 9-(திங்கள்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.42,920-க்கும், ஒரு கிராம் ரூ.5,365-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக நேற்று ஒரு சவரன் ரூ.42,960-க்கும், ஒரு கிராம் ரூ.5,370-க்கும் விற்பனையானது.

அதேசமயம், வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.73.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.73,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.