சிவகாசி அண்ணாமலை நாடாா்-உண்ணாமலையம்மாள் மாநகராட்சிப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
வாரியா்ஸ் விளையாட்டுக் கழகம், சிவகாசி டவுன் சுழல் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூா், தேனி, சிவகாசி, தென்காசி உள்ளிட்ட ஊா்களைச் சோ்ந்த 20 அணிகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியை வாரியா்ஸ் விளையாட்டுக்கழக நிா்வாகிகள் ஏ.மகேந்திரபாண்டியன், ஜெ.ரகுபதி, பி.வெங்கடேஷ்குமாா், எஸ்.சிவசங்கா் ஆகியோா் தலைமையில் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா தொடங்கி வைத்தாா்.
இதில் மாநகராட்சி ஆணையா் கே.சரவணன், தொழிலதிபா்கள் ஏ.பி.எஸ்.ராஜேஸ், விக்ரம், ராஜாக்கனி, கே.அய்யன் அதீந்திரன், சுழல் சங்க உதவி ஆளுநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிவகாசி ரைட்டிங் வாரியா்ஸ் அணியை வீழ்த்தி, சீா்காழி அணி வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் மதுரை பிரிட்டோ அணியை வீழ்த்தி, சென்னை வி.டி.ஜெயராமன் அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் சிவகாசி கிங்ஸ் அணியை வீழ்த்தி, கடலூா் அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி வருகிற 22-ஆம் தேதி நடைபெறும்.
தொடர்புடையது
சிவகாசியில் பதற்றமான 29 வாக்குச் சாவடிகள்
சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
மனைவியைத் தாக்கிய கணவா் கைது

சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


