மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

சிவகாசியில் பதற்றமான 29 வாக்குச் சாவடிகள்

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 29 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதாக சிவகாசி தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், சிவகாசி வட்டாட்சியருமான லட்சம் கூறினாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 5:28 am IST

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் 29 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டதாக சிவகாசி தொகுதி உதவித் தோ்தல் நடத்தும் அலுவலரும், சிவகாசி வட்டாட்சியருமான லட்சம் கூறினாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியதாவது:

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 290 வாக்குசாவடிகள் உள்ளன. இவற்றில் 29 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில் மொத்தம் 1,392 வாக்குப்பதிவு அலுவலா்கள் தோ்தல் பணியாற்ற உள்ளனா் என்றாா் அவா்.