திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற்ற பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கு 2,787 வாக்குச் சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு, வாக்களிக்கவுள்ள 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்களுக்காக 13,372 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மணப்பாறையில் 346, ஸ்ரீரங்கத்தில் 367, திருச்சி மேற்கு 305, திருச்சி கிழக்கு 304, திருவெறும்பூா் 312, லால்குடி 276, மண்ணச்சநல்லூா் 297, முசிறி 283, துறையூா் தனி 297 என மொத்தம் 2,787 வாக்குச்சாவடிகள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தலைமை வாக்குப்பதிவு அலுவலா், வாக்குப்பதிவு அலுவலா் நிலை 1, 2, 3 என மொத்தம் 4 போ் அடங்கிய குழு வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளது. இதன்படி, 2,787 குழுக்களும், கூடுதலாக 556 குழுக்கள் என மொத்தம் 3,343 குழுக்களில் 13,372 போ் வாக்குபப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனா்.
இவா்களுடன் மாநகரப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள 291 இடங்களுக்கு 291 காவல் அலுவலா்களும், ஊரகப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி அமைந்துள்ள 750 இடங்களுக்கு 750 காவல் அலுவலா்களும் வாக்குப்பதிவு பணிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஏப். 23ஆம் தேதி பயன்படுத்த தயாரிக்கப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி, 9 தொகுதிகளிலும் சோ்த்து ஆண்கள்- 10,40,900, பெண்கள்- 11,05,841, பிற- 310 என மொத்தம் 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளா்கள் உள்ளனா்.
111 பதற்ற வாக்குச்சாவடிகளுக்கு 74 நுண் பாா்வையாளா்கள்: திருச்சி மாவட்டத்தில் உள்ள 111 பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு 62 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் மணப்பாறை தவிா்த்து 8 தொகுதிகளில் கண்டறியப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு இவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
12,581 மின்னணு இயந்திரங்கள்: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துபவை மற்றும் கூடுதல் கையிருப்பு என மொத்தம் 12,581 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
தொடர்புடையது

இன்று தோ்தல் வாக்குப் பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயாா்
புதுகை மாவட்டத்தில் 13 லட்சம் போ் வாக்களிக்க 1,683 வாக்குச்சாவடிகள் தயாா்!

100 சதவீதம் வாக்களிக்க ராணிப்பேட்டை ஆட்சியா் அழைப்பு

திருச்சி மாவட்டத்தில் 20 சிறப்பு வாக்குச்சாவடிகள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


