உருக்குலையும் காஸா!

இஸ்ரேல் பழிவாங்கும் படலம் காஸா பகுதியைத் தாண்டியும் விரிவடைந்து வருகிறது.
காசா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தீ மற்றும் புகையுமாய் காட்சியளிக்கும் காசா நகரம்.
காசா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து தீ மற்றும் புகையுமாய் காட்சியளிக்கும் காசா நகரம்.

இஸ்ரேல் போர் விமானங்கள் காஸாவிற்கு அருகில் உள்ள கடலோர பகுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது.

மக்கள் தங்களுக்கான பாதுகாப்பைத் தேடி காஸா பகுதியில் இருந்து அதன் அண்டை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பலர், ஐ.நா.வால் நிர்வாகிக்கப்படும் பள்ளிகளில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். 

காஸா மக்களின் நிலைமை மேலும் மோசமாகி வருவதைக் கண்ட மனிதநேய ஆர்வலர்கள் அவர்களுக்கு உதவிகளை ஏற்படுத்தி தரக் குரல் கொடுத்து வருகின்றனர். 

உணவு, எரிபொருள் மற்றும் மருந்து பொருள்கள் எதுவும் உள்ளே செல்ல இயலாதவாறு இஸ்ரேல் முழுமையாக காஸாவை முற்றுகை செய்துள்ளது. ஏற்கெனவே இருந்த ஒரே வழியான எகிப்தும் நேற்று (செவ்வாய்க் கிழமை) முதல் அடைப்பட்டுவிட்டது. காஸாவின் மருத்துவமனைகளில் போதிய மருந்து பொருள்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.    

இதுவரை இரு தரப்பிலும் 2100-க்கும் அதிகமான உயிர்கள் பலியாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காஸா பகுதியை 2007 முதல் அதிகாரத்தில் வைத்திருக்கும் ஹமாஸ் குழுவை ஒடுக்கும் செயலில் மேலும் தீவிரம் காட்டி வருகிறது, இஸ்ரேல். இந்தச் சூழலால், காஸாவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளதாக ஐ.நா. தெரிவிக்கிறது.  

இஸ்ரேல் போர் விமானங்கள் கடந்த 24 மணிநேரத்தில் காஸாவிற்கு அருகில் உள்ள அல்-பர்ஹான் பகுதியில் பல இலக்குகளைத் தாக்கியுள்ளது என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கிறது, இஸ்ரேல் இராணுவம்.

மேலும், இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் ஹமாஸ் எதிர்த் தாக்குதல் நடத்தி வந்தது. சிரியா மற்றும் லெபனான் பகுதிகளில் இருந்தும் பாலஸ்தீன் இராணுவம் தாக்குதல் நடத்தியது.  

லட்சக்கணக்கிலான இஸ்ரேல் மக்கள், ஹமாஸின் தாக்குதல் தொடங்கிய நாள் முதல் தங்கள் நாட்டுக்குள்ளாகவே இடம்பெயர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com