
காஸா ஐரோப்பிய மருத்துவமனையின் மருத்துவர் யூசுப் அல்-அகாத் பேசிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில் மருத்துவர் முன்னிருக்கும் படுக்கையில் ஆறு பிஞ்சு குழந்தைகளின் சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவர் யூசுப் அல் அகாத் பேசுகையில், “இந்தக் குழந்தைகளைப் பாருங்கள். யார் இவர்களைக் கொன்றது?”
“சுதந்திர உலகமே, ஒடுக்கப்பட்டு துயறுற்று இருக்கும் இந்த மக்களின் மீது படுகொலை நடத்தப்பட்டபோது எங்கு சென்றாய்?” என உருக்கமாகப் பேசியுள்ளார்.
காண்போரைக் கண் கலங்க வைக்கும் இந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 3,478 எனவும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான நபர்களின் எண்ணிக்கை 69 எனவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.