பாரதம் என மாற்றினால்.. இந்தியா பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும்?

பாரதம் என பெயரை மாற்றினால், இந்தியா பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
பாரதம் என மாற்றினால்.. இந்தியா பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும்?


ஏற்கனவே இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவதற்கு உள்நாட்டில் பல்வேறு எதிர்க்கருத்துகள் எழுந்துள்ள நிலையில், பாரதம் என பெயரை மாற்றினால், இந்தியா பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது இந்த சர்ச்சை, எல்லைத் தாண்டி எதிரொலித்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் உள்ளூர் ஊடகம், இந்தியா, தனது நாட்டின் பெயரை பாரதம் என மாற்றினால், பாகிஸ்தான் அந்த பெயரை உரிமை கொண்டாடலாம் என்று  கூறியிருப்பதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தான், இந்துஸ் மாகாணம் என்று அடையாளப்படுத்தும் விதமாக இந்தியா என்ற பெயரை உரிமை கோருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்த பதிவை ஆதரிப்போர் தெரிவித்துள்ளனர். 

இதுவரை மத்திய அரசிடமிருந்து, இந்தியா என்ற பெயரை பாரதம் என மாற்றுவது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்தியா என்ற பெயருக்கு பாகிஸ்தான் உரிமை கோரும் என்ற அளவுக்கு விவாதங்கள் சென்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com