
வடஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 800-ஐத் தாண்டியுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மொராக்கோவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.11 மணிக்கு ரிக்டர் 6.8 அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 672 பேர் காயமடைந்துள்ளனர்.
நள்ளிரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 18.5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
படிக்க: தில்லியில் முதல்வர் ஸ்டாலின்: இரவு விருந்தில் பங்கேற்கிறார்!
இந்த நிலநடுக்கம் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல், அண்டை நாடான அல்ஜீரியாவிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அந்நாட்டின் தலைநகர் ரபாத் முதல் மாரகெச் வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், நாட்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படிக்க: ஜி20 கூட்டறிக்கை: உறுப்பு நாடுகள் ஒப்புதல்!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...