
மொராக்கோவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, 296 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவாகியுள்ளது. கட்டட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அந்நாட்டின் தலைநகர் ரபாத் முதல் மாரகெச் வரை நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், நாட்டில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பகுதிகளிலும் பயங்கர பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் முதற்கட்டமாக இரவு 11.11 மணிக்கு நேரிட்டதாகவும் இது 6.8 ஆக ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க..சென்னிமலை அருகே வயதான தம்பதி கொலை; ஒரு வாரம் முன்பு இறந்த வளர்ப்புநாய்
மொராக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை நெட்வொர்க், இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 ஆக இருந்ததாத் தெரிவித்துள்ளது.
4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
19 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்பட்ட நிலநடுக்கம் 4.9 ஆகப் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், முக்கிய நகரங்களில் உள்ள கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இதையும் படிக்க.. ஜி20 உச்சிமாநாடு: தட்டுகளை அலங்கரிக்கும் மசால் தோசை உள்பட 500 வகை உணவுகள்
நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் தலைநகர் ரபாத்தில் இருந்து மாரகேச் மாகாணம் வரை தெருக்களிலும் திறந்தவெளி மைதானங்களிலும் குவிந்தனர்.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சேதமடைந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமான வரலாற்றுச் சிறப்புமிக்க மராகேச்சில் உள்ள பழைய நகரத்தைச் சுற்றியுள்ள புகழ்பெற்ற சிவப்புச் சுவர்களின் பகுதிகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளை அங்கிருந்து வரும் விடியோக்கள் மூலம் அறிய முடிகிறது.
சுற்றுலாப் பயணிகளும் மற்றவர்களும் மக்கள் அலறி அடித்துக்கொண்டு நகரத்தில் உள்ள உணவகங்களை காலி செய்யும் வீடியோக்கள் டிவிட்டர் பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நில அதிர்வுகளால், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல், கவலையுடன் தெருக்களில் தங்கியுள்ளனர்.
1960ல் அகதிர் பகுதிக்கு அருகே ரிக்டர் அளவில் 8 புள்ளியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...