
கோப்புப்படம்
சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்றார்.
சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் மேனன் சிங்கப்பூர் அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சிங்கப்பூரின் 8-ஆவது அதிபரும், முதல் பெண் அதிபருமான ஹலீமா யாகூபின் பதவிக் காலம் நிறைவடைவதைத் தொடா்ந்து, அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இந்த மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தோ்தலில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் 17.46 லட்சம் (70.4 சதவீதம்) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: மும்பை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க தூசு பறிமுதல்!
அதையடுத்து, சிங்கப்பூரின் 9-ஆவது அதிபராக தா்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்றார். இவர் பொருளாதார வல்லுநராக கருதப்படுபவர் ஆவார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...