தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

தைவானில் 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு புதன்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஹூவாலியனில் ஒரு ஐந்து மாடி கட்டடம் பெரிதும் சேதமடைந்ததாகவும், அதன் முதல் தளம் இடிந்து விழுந்தது மற்றும் மீதமுள்ளவை 45 டிகிரி கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன.
ஹூவாலியனில் ஒரு ஐந்து மாடி கட்டடம் பெரிதும் சேதமடைந்ததாகவும், அதன் முதல் தளம் இடிந்து விழுந்தது மற்றும் மீதமுள்ளவை 45 டிகிரி கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன.
Published on
Updated on
2 min read

தைபே: தைவானில் 25 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு புதன்கிழமை காலை(ஏப்.3) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது, 4 பேர் பலியானதாகவும், தெற்கு நகரத்தில் உள்ள ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தது மற்றும் தெற்கு ஜப்பானிய தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்களஅ தெரிவிக்கின்றன.

இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியதாவது: தைவானின் ஹூவாலியனில் கிழக்கு கடற்கரையில் புதன்கிழமை காலை 7.58 மணியளவில் ஹுவாலியனில் இருந்து 18 கி.மீ தொலைவில் தென்-தென்மேற்கில் சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 35 கி.மீ (21 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.4 அலகுகளாகப் பதிவானது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. ஹூவாலியனில் காலை ஏற்பட்ட ஆரம்ப நிலநடுக்கத்திற்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் ஒன்று 6.5 அலகுகளாகவும் மற்றும் 11.8 கிலோமீட்டர் (7 மைல்) ஆழத்தில் இருந்ததாக யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.

குறைந்த மக்கள்தொகை கொண்ட ஹூவாலியன் நகரத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. ஹூவாலியனில் ஒரு ஐந்து மாடி கட்டடம் பெரிதும் சேதமடைந்ததாகவும், அதன் முதல் தளம் இடிந்து விழுந்தது மற்றும் மீதமுள்ளவை 45 டிகிரி கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் தைபேயில்,ஏராளமான வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், பழைய கட்டடங்கள் மற்றும் சில புதிய அலுவலக வளாகங்களில் இருந்த ஓடுகள் இடிந்து விழுந்ததாகும் , 4 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிகள் மாணவர்களை வகுப்பறைகளில் இருந்து விளையாட்டு மைதானங்களுக்கு வெளியேற்றி, அவர்களுக்கு பாதுகாப்பிற்காக மஞ்சள் நிற தலைக்கவசங்களை கொடுத்து அணிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஏற்பட்ட நில அதிர்வுகளுக்கு மத்தியில், பல சிறு குழந்தைகள் இருசக்கர வாகன தலைக்கவசங்களை அணிந்து கொண்டு, கட்டட இடிபாடுகளிலிருந்து விழும் பொருள்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து வருகின்றனர்.

நில அதிர்வுகளை தொடர்ந்து 2.3 கோடி மக்கள் வசிக்கும் தீவு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பொது ஊடகங்கள் மற்றும் செல்போன் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.

பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு முன் கட்டப்பட்ட பள்ளியான தேசிய சட்டப்பேரவை, சுவர்கள் மற்றும் கூரைகள் சேதமடைந்துள்ளன.

சீனாவின் கடற்கரையில் உள்ள தைவானிய கட்டுப்பாட்டில் உள்ள தீவான கின்மென் வரை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக

தைவானின் பூகம்ப கண்காணிப்பு பணியகத்தின் தலைவர் வூ சியென்-ஃபு கூறினார்.

தைவானில் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிகப்பெரியதாக கருதப்படுகிறது.

ஹூவாலியனில் ஒரு ஐந்து மாடி கட்டடம் பெரிதும் சேதமடைந்ததாகவும், அதன் முதல் தளம் இடிந்து விழுந்தது மற்றும் மீதமுள்ளவை 45 டிகிரி கோணத்தில் சாய்ந்த நிலையில் உள்ளன.
தோ்தலுக்குப் பிறகு இந்திய உறவு மேம்பட வாய்ப்பு: பாகிஸ்தான் நம்பிக்கை

தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு யோனகுனி தீவின் கடற்கரையில் 30 செ.மீ (சுமார் 1 அடி) சுனாமி அலை கண்டறியப்பட்டதாகவும்,இஷிகாகி மற்றும் மியாகோ தீவுகளில் சிறிய அலைகள் காணப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் பேரிடர் மீட்புப் படை ஒகினாவா பகுதியைச் சுற்றி சுனாமி தாக்கம் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக விமானங்களை அனுப்பியுள்ளது மற்றும் தேவைப்பட்டால் அங்கிருந்து வெளியேற்றப்படுவர்களை தங்கவைப்பத்தற்கான இடங்களையும் தயார் செய்து வருகிறது.

சீன நிலப்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் சீனா விடுக்கவில்லை.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஹவாய் அல்லது அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியமான குவாம் ஆகிய பகுதிகளுக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று கூறியுள்ளது.

தைவான் ஹூவாலியனில் 2018 இல் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஹோட்டல் மற்றும் பிற கட்டடங்கள் இடிந்து விழுந்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தைவானின் சமீபத்திய ஆண்டுகளில் மிக மோசமான நிலநடுக்கம் 1999 செப்டம்பர் 21 இல் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் அளவுகோலில் 7 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் பலியாகினர். சுமார் 100,000 பேர் காயமடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயம், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் உலகின் பெரும்பாலான பூகம்பங்கள் நிகழும் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுகள் ஏற்படும் பகுதிகளின் வரிசையில் தைவான் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com