ஆள்குறைப்பில் டெஸ்லா? எலான் மஸ்க்கின் முடிவு புதிதல்ல!

டெஸ்லாவின் பணி நீக்க அதிரடி: எலான் மஸ்க் நிலைப்பாடு
எலான் மஸ்க்
எலான் மஸ்க்

மின்சார கார்களைத் தயாரிக்கும் டெஸ்லாவின் பல துறைகளில் இருந்து 20 சதவிகிதம் ஊழியர்கள் பணியிழப்புக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திறமையாக பணியாற்றுபவர்கள் உள்பட பல்வேறு துறைகளின் ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் மோசமான பொருளாதார நிலைதான் இந்த முடிவுக்குக் காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெக் கிரஞ்ச், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட குறிப்பில்- அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் 10 சதவிகிதம் அல்லது 14 ஆயிரம் ஊழியர்களை இந்த நடவடிக்கை பாதிக்கும்.

அதில், செலவினங்களைக் குறைக்கவும் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கான தயாரிப்புக்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது,

பணி இழப்புக்கு உள்ளாகும் பணியாளர்களில் பலர் திறன் வாய்ந்தவர்கள் எனவும் டெக் கிரஞ்ச் அறிக்கை தெரிவிக்கிறது.

தனது குழுவில் 20 சதவிகிதம் ஊழியர்கள் பணியிழப்புக்கு ஆளாவதாக டெஸ்லா மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரோஹன் பட்டேல், ட்ரூ பாக்லினோ உள்ளிட்ட முக்கிய தலைமை நிர்வாகிகளும் இந்த நடவடிக்கையிலிருந்து விதி விலக்கல்ல.

டெஸ்லா குறைந்த விலை மின்சார கார் (25 ஆயிரம் டாலர்கள் மதிப்பில்) தயாரிக்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. முதல் காலாண்டுக்கான வருவாயை அடுத்த வாரம் டெஸ்லா அறிவிக்கவுள்ளது.

எலான் மஸ்க் 2022-ல் ட்விட்டரை வாங்கியபோது 80 சதவிகித ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com