‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

காஸாவில் பிணைக்கைதிகள் விடுதலைக்கு 17 நாடுகள் கோரிக்கை
டெக்சாஸில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்களின் போராட்டம்
டெக்சாஸில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்களின் போராட்டம்Mikala Compton/American-Statesman

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இணைந்து வியாழக்கிழமை ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் ஆர்ஜெண்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, கனடா, கொலம்பியா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, போலந்து, போர்த்துகல், ரோமானியா, செர்பியா, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் பிரிட்டன் நாடுகள் இணைந்துள்ளன.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“காஸாவில் 200 நாள்களுக்கு மேலாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணையக்கைதிகளை உடனடியாக விடுவிக்கக் கோருகிறோம். அவர்களில் எங்கள் நாட்டின் குடிமக்களும் உள்ளனர், பிணைக்கைதிகள் மற்றும் காஸாவில் உள்ள மக்களின் விதி சர்வதேச சட்டத்தால் பாதுகாக்கப்படுவதும் சர்வதேச நாடுகளின் கவலைக்குரியதும் ஆகும்.

“பிணைக்கைதிகளின் விடுதலை மற்றும் காஸாவில் உடனடி மற்றும் நீடித்த போர் நிறுத்தத்தைக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அந்த ஒப்பந்தம் காஸாவில் கூடுதல் மனிதாபிமான நிவாரண உதவிகளை கொண்டுச் சேர்க்கும், பகையை முடித்துக் கொள்ளவும் வழியமைக்கும். காஸா மக்கள் அவர்கள் வீடுகளுக்குத் திரும்பலாம், அவர்களுக்கான தங்குமிடம் மற்றும் நிவாரண ஏற்பாடுகளுக்கான தயாரிப்புகள் அவர்களுக்கு முன்னதாக கையளிக்கப்படும்.

“எங்கள் மக்களை வீட்டுக்கு அழைத்துவரும் மத்தியஸ்த முயற்சிகளுக்கு வலுவான ஆதரவளிக்கிறோம். ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய அழைப்பு விடுக்கிறோம். இந்த நெருக்கடி நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும் அதனால் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மை கொண்டுவரவும் கூட்டாக கவனம் செலுத்த இயலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com